Daily Horoscope
✕

சுவையான மோர்க்குழம்பு செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 2 மார்ச் 2021 (18:26 IST)
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
புளிப்பில்லாத கடைந்த மோர் - ஒரு கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சுண்டைக்காய் - 15
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.

பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 
 
அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய்யில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும். சுவையான மோர்க்குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments