1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (07:45 IST)

முதல் தேதியிலேயே உயர்ந்த சிலிண்டர் விலை: பொதுமக்கள் அதிருப்தி

சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 100 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது இந்த மாதம் முதல் தேதியே ரூபாய் 25 உயர்ந்துள்ளது ஏழை எளிய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
சமையல் சிலிண்டரின் விலை கடந்த ஜனவரி மாத இறுதியில் 710 ரூபாய் என்று இருந்தது ஆனால் திடீரென பிப்ரவரி மாதத்தில் 25, 50, 25 ரூபாய்கள் என மூன்று முறை சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனால் பிப்ரவரி இறுதியில் 810 என்று சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இருந்தது
 
இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் தேதி இன்று பிறந்துள்ள நிலையில் இன்றே சமையல் கேஸ் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டு உள்ளதால் தற்போது சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 835 ஆக உயர்ந்துள்ளது. இதே ரீதியில் சென்றால் சமையல் சிலிண்டரின் விலை 1000 என்று வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது 
 
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் அதிகமாக உயர்ந்து கொண்டிருப்பதை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது