புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (17:58 IST)

சுவையான கோஸ் வடை செய்ய !!

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை தயார்.