சுண்டைக்காய் துவையல் செய்வது எப்படி...?

தேவையானவை:
 
சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 (சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 3 சுளை
பெருங்காயம் - 1 மிளகு அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்.
செய்முறை:
 
சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவரும். பிறகு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். 
 
ஒரு காடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம், வரமிளகாய் போட்டு  பொரிந்ததும் பச்சைமிளகாயைப் போடவும். அரை நிமிடம் வதக்கி சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். அது பாதி வதங்கும்போது  வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போடவும். அரைநிமிடம் வதக்கி  இறக்கி ஆறவிடவும்.
 
ஆறியதும் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :