ஹீமோகுளோபினை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
நெல்லிக்காய் - 1 கிலோ
வெல்லம் - 1 1/4 கிலோ
சுக்கு - 25 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
செய்முறை:
 
நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். 
 
கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.  இப்போது நெல்லிக்காய் ஜாம் தயார். இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆறவைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி  கொள்ளலாம். 
 
ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.
பயன்கள்:
 
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :