1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
வெந்தயம் - 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
மல்லி - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும்.  தேங்காயை தனியாக அரைக்கவும்.
 
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து  வதக்கவும்.

 
அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் தெளிந்தது மேலே  வந்தவுடன் இறக்கவும்.