ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (10:57 IST)

ஈஸியா செய்யலாம் பேச்சிலர் ஸ்டைல் எம்டி குஸ்கா!

Empty Kuska
பலருக்கும் பிரியாணி, குஸ்கா என்றால் விருப்பமான உணவாக இருக்கிறது. சிக்கன், முட்டை இல்லாமல் பாய் வீட்டு ஸ்டைல் எம்டி குஸ்காவை ஈஸியாக எப்படி செய்வது என பார்ப்போம்



தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 3 கப், தக்காளி, புதினா, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தயிர், பெரிய வெங்காயம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு தேவையான அளவு

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.

அதனுடன் நறுக்கிய புதினா, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும். எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள் தூவி கிளறி விட வேண்டும். பின்னர் அதில் தயிரை கொட்டி கிளறியபின் தக்காளி சேர்த்து நன்றாக வதங்க விட வேண்டும்.

கொஞ்சமாக தண்ணீர், உப்பு சேர்த்து கிரேவி பதத்திற்கு கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் பாஸ்மதி அரிசியை கழுவி குக்கரில் வைத்து வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் நாம் தயாரித்து வைத்த குஸ்கா மசாலாவையும் சேர்த்து மூடி வேகவைக்க வேண்டும்.

சாதம் நன்றாக வெந்ததும் குக்கரை திறந்தால் மாசாலா சாதத்துடன் கலந்து சுவையான குஸ்கா தயார் நிலையில் இருக்கும். வெங்காயத்தை நைஸாக வெட்டி தயிரில் கலந்து தயிர் பச்சடி செய்து கொண்டு, அவித்த முட்டையுடன் எம்டி குஸ்காவை சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Edit by Prasanth.K