புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுலபமான சுவையான கார சட்னி செய்ய...!

தேவையானவை: 
 
சின்ன வெங்காயம் - ஒரு கப் 
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு 
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
காய்ந்த மிளகாய் - 8
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
சின்ன வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு  ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை  தாளித்து, அரைத்த சட்னியில்  சேர்க்கவும்.
 
குறிப்பு: தேவைப்பட்டால் வெங்காயம், தக்காளியை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியும் அரைக்கலாம்.