ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:44 IST)

எப்படிப்பட்ட வாஸ்து தோஷத்தையும் நீக்கும் சக்தி இதற்கு உள்ளதா...?

எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. காரணம் இந்த மருதாணி செடிக்கு இருக்கும் வாசம் தான். இந்த வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சிகளும் வீட்டின் அருகில் நெருங்காது.


வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும் போது, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சேர்த்து இந்த மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து தூபம் போட்டால், அந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுபவர்களாக இருந்தாலும்கூட, தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவருக்கு எப்படி பட்ட வாஸ்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது என்பது வாஸ்து நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் இருப்பார்கள் சிலருக்கு, அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராது. வாடகை வீட்டை மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கும். சிலபேர் சொந்த வீட்டில் இருந்தாலும், பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.