1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

கடைகளில் வாசற்படி மற்றும் கதவுகள் எங்கு எந்த திசையில் அமைப்பது நல்லது...?

வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும்.
 

மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும்ள கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.
 
கதவுகள்: கடையில் இரடுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.
 
தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. 
 
வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.
 
பூஜை இடம்: கடையின் ஈசான்ய மூலையில் கடவுள்படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.