ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:53 IST)

வாஸ்து சாஸ்திர முறைப்படி தோட்டம் அமைப்பது எவ்வாறு...?

Vastu - Garden
வாஸ்து சாஸ்திர முறைப்படி தோட்டம் அமைப்பதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் மனதுக்கு ஆனந்தம் ஏற்படுவதோடு குடும்பம் குதூகலம் அடையும். உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பல நோய்கள் மலர்கள், செடிகளால் குணமாக்கப்படுகின்றன.


வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையில் உள்ள நல்ல சக்திகளை நம் பஞ்ச பூதங்களாலான நம் வீடு உட்கிரகித்து நமக்கு இயற்கையாக பெற உதவும். மனிதன் நோயற்ற வாழ்வு வாழவும், மன நிம்மதியுடன் வாழவும் வழிவகை செய்யும் ஒரு பண்டைய கட்டிடடக் கலையே வாஸ்து சாஸ்திரமாகும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் தோட்டத்தின் சுவருடன் ஒரு மா, வேம்பு அல்லது வாழை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நடவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பெரிய மரங்கள் முன் பகுதியை குளிர்வித்து நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்கு வழங்குகின்றன. வடகிழக்கு பகுதியை ஓபனாக விடவேண்டும்.

வீட்டில் தோட்டம் அமைப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். பல வாஸ்து தாவரங்கள் நேர்மறையை குவித்து பரப்புகின்றன, அவற்றில் ஒன்று துளசி செடி. இந்த புனித செடியை வீட்டின் வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வைக்கலாம். இருப்பினும், தோட்டத்தின் எல்லைகளில் தாவரங்களை வைப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

துளசி செடி நேர்மறையை தருகிறது. வீட்டிற்கான வாஸ்து சாஸ்திரத்தின் பொருள், பலன்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகும். கலை மற்றும் அறிவியலின் இந்த அழகான கலவையைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையை எந்த தொந்தரவும் இல்லாமல் மேம்படுத்தலாம்.