ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (09:10 IST)

செல்வ வளத்தை அதிகரிக்கும் வாஸ்து குறிப்புகள்!

செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் சில வாஸ்து குறிப்புகளை தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.
 
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.
 
எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
 
பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.
 
உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.
 
வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
 
வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.