1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (11:39 IST)

உடல் ஆரோக்கியத்திற்கு வாஸ்து சாஸ்திரம் எவ்வாறு உதவுகிறது...?

Vastu
வாஸ்து புருஷன் விழித்திருக்கும் வேளையில்தான் கட்டிடம் கட்ட பூஜை செய்யவேண்டும். வாஸ்து புருஷன் சில நாட்களில் தான் விழித்திருப்பதாகவும், சாப்பிட்டுபின் தாம்பூலம் தரிப்பதாகவும் அந்த வேளையில் பூஜை செய்வது நல்லது என்பது ஐதீகம்.


வாஸ்து புருஷனின் தலைப்பகுதி ஈசான்யத்தில் (வடகிழக்கு) அமைவதை கவனியுங்கள். எனவே தான் நாம் அப்பகுதிக்கு முக்கியத்துவம் தருகின்றோம். ஒரு மனிதனின் அனைத்து செயல்களுக்கும் பிறப்பிடம் மூலையில் இருந்து செய்லபடுவது போல் ஒர் மனையின் அனைத்து செயல்களும் வாஸ்து புருஷனின் தலை இருக்கும் ஈசான்ய பகுதியில் இருந்து தான் பெறப்படுகின்றது.

இந்த பூமியில் ஏற்படும் காந்த சக்தியின் சுழற்சி வடகிழக்கில் ஆரம்பித்து தென் மேற்கில் முடிவடைகின்றது. எனவே நாம் வடகிழக்கில் காலியிடம் நிறைய விடுவதன் மூலம் அந்த சக்தியை அதிகம் பெறவும் சூரியக் கதிர்களின் மூலம் அந்த நம்மிடத்தில் சேமித்து வைக்கவும் உதவுகின்றது. மேலும் தென் மேற்கில் உயரமான கட்டிடங்கள் கட்டிவதன் மூலம் வடகிழக்கில் சேமிக்கப்பட்ட சக்தி அனைத்து இடங்களுக்கும் பரவி கடைசியில் தென்மேற்கில் உறைவதற்கு ஏதுவாக அமைகின்றது. மேலும் வடகிழக்கில் கீழ் நிலை நீர்த்தொட்டி, கிணறு ஆழ்நிலை கிணறு இவைகளின் மூலம் மேலும் ஏதுவாக அமைகின்றது.

மனிதனின் தலை முதல் பாதம் வரை ரத்த ஒட்டம் எவ்வாறு நிகழ்கின்றதோ அவ்விதமே “வாஸ்து புருஷன்” எனப்படும் மாய உருவத்திலும் வடகிழக்கு எனும் தலை பகுதி முதல் தென் மேற்கு எனப்படும் கால் பகுதி வரை சக்திகளின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

எனவே வடகிழக்கில் அதில் இடம் விடுவதன் மூலம் “வாஸ்து புருஷனின்” சக்தியை நாம் அதிகப்படுத்தி, அதன் மூலம் நாம் பலவிதமான சக்திகளை பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், சகல செல்வங்களுடனும் வாழ்வது உறுதி.