1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து சாஸ்திரத்தின்படி எப்படிப்பட்ட மனைகளை வாங்குவது சிறந்தது...?

மனை வாங்கும்போது மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி எப்படி பட்ட மனைகளை வாங்குவது சிறந்தது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

புதிதாக வீடு அல்லது  இன்ன பிற கட்டிடங்கள் கட்டுவதற்காக காலி மனைகளை நமது பொருளாதார வசதிக்கு ஏற்றவாறே அமைகிறது. 
 
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. ஒருவர் ஒரு கட்டிடம் கட்டும்போது அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமை அமைந்துள்ளதா என்பதை பார்த்து தான் அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும். இதைத்தான் நாம் வாஸ்து என்கிறோம்.
 
ஒரு கட்டிடம் கட்டும்பொழுது அதன் பேஸ் மட்டத்தை நன்கு உறுதியாக போட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் அப்பொழுது தான் அந்த கட்டிடம் நீண்ட நாள் வரை உறுதியாக இருக்கும். அதுபோலத்தான் ஒரு கட்டிடத்திற்கு வாஸ்து பார்த்து கட்டுவதும் முக்கியம். எனவே நாம் புதிதாக ஒரு நிலம் வாங்கும் போதும் வாஸ்து பார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
 
முதலில் பார்க்க வேண்டிய விஷயம் என்றால் நாம் வாங்க கூடிய நிலம் செவ்வகமாக இருப்பது நல்லது. நாம் வாங்கும் நிலத்தில் வடகிழக்கு மூலையைக் காட்டிலும் தென்மேற்கு மூலை சற்று தாழ்வாக இருக்க வேண்டும்.
 
அதாவது இதன் அர்த்தம் என்னவென்றால் வடகிழக்கு மூலையில் நீரை ஊற்றினால் அது தென்மேற்கு மூலையை சென்றடையுமாறு நிலம் அமைய வேண்டும். அது தான் ஒரு நல்ல இடம். ஒரு நிலம் இந்த அம்சங்களை கொண்டதாக அமைந்தால் தான் அந்த நிலத்தில் நல்ல வளர்ச்சியும், நீரோட்டமும் இருக்கும் என்று அறிவியலும் கூறுகின்றது. ஆகவே நிலம் வாங்கும் போது வாஸ்து பார்த்து வாங்குவது நல்லது.