திங்கள், 15 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (09:19 IST)

தரையை பளபளப்பாக மாற்ற இதை ட்ரை பண்ணுங்க!

தரையை பளபளப்பாக மாற்ற இதை ட்ரை பண்ணுங்க!
வீடு பராமரிப்பில் பெரிதாக வேலை வாங்குவது தரையை சுத்தம் செய்வதுதான். எவ்வளவு துடைத்தாலும் தரை பளபளப்பாகவில்லையா? தரையை பளபளப்பாக உதவும் சில பொருட்களை பற்றி பார்ப்போம்


  • டைல்ஸ் தரையில் உள்ள அழுக்குகளை நீக்கி தரையை பளபளப்பாக்க வீட்டில் உள்ள சில பொருட்களே போதுமானது.
  • வெள்ளை வினிகர் கிருமி நாசினியாக செயல்படுவதுடன், தரையை பளபளப்பாக சுத்தம் செய்யவும் உதவுகிறது.
  • வினிகர் வாசனை பிடிக்காதவர்கள் வினிகர் கொண்டு தரையை சுத்தம் செய்துவிட்டு பின்னர் சோப்பு பவுடர் கொண்டு துடைக்கலாம்.
  • சமையலுக்கு பயன்படும் பேக்கிங் சோடாவை தரையை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.
  • அரை கப் பேக்கிங் சோடாவை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து தரையை துடைத்தால் அழுக்கு நீங்கி பளபளப்பு கிடைக்கும்.
  • வினிகருடன் திரவ சோப்பு லிக்விடை கலந்து தண்ணீர் சேர்த்து துடைக்க டைல்ஸ் தரை பளபளப்பாகும்.
  • பேக்கிங் சோடாவுடனும் திரவ சோப்பு லிக்விடை பயன்படுத்தி தரையை சுத்தலாம்.