செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (09:21 IST)

துணி துவைக்கும்போது இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

Cloth wash
துணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் என்றாலும் துணிகளை சரியான முறையில் பிரித்து துவைக்க வேண்டியது அவசியம். துணி துவைக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.


  • வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது எல்லா துணிகளையும் ஒன்றாக போட்டு துவைக்கக் கூடாது.
  • வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்கள் துணிகளை, கைக்குட்டை மற்றும் உப துணிகளை தனியாக துவைக்க வேண்டும்.
  • வீட்டில் பயன்படுத்தும் படுக்கை துணி, உள்ளாடைகள், துண்டுகளை தனியாக ஊற வைத்து துவைப்பது நல்லது.
  • புதிதாக வாங்கிய துணிகள் சாயம் போகும் என்பதால் மற்ற துணிகளோடு சேர்த்து துவைத்தால் அந்த சாயம் மற்ற துணிகளில் ஒட்டிக் கொள்ளும்.
  • துணிகளை வாஷிங் பவுடர், லிக்விட் அல்லது சோப்பு எதை கொண்டு துவைத்தாலும் துவைக்கும் முன் நன்றாக ஊற வைப்பது முக்கியம்.
  • துவைத்த துணிகளை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாக்டீரியாக்கள் இருந்தாலும் வெயிலில் அழியும்.
  • துணிகளை காயப்போடும்போது முறுக்கி பிழிந்து விட்டு உதறிவிட்டு காயப்போட்டால் துணியில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்கும்.