புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

உப்பை பயன்படுத்தி சில பயனுள்ள குறிப்புகள் !!

வெள்ளிப் பாத்திரங்களை உப்பு வைத்து தேய்த்தால் வெள்ளிப் பாத்திரங்களில் பதிந்துள்ள கருமை நீங்கி வெள்ளிப் பொருள்கள் பளிச்சென்று இருக்கும்.

காலிபிளவரில் உள்ள புழுக்களை வெளியேற்ற வெந்நீரில் வைக்கும் பொழுது அதில் சிறிதளவு உப்பை பொட்டு வைத்து விட்டால் காலிபிளவரில் உள்ள புழுக்கள் வெளியேறுவதுடன் பூவும் நிறம் மாறாமல் வெள்ளையாக  இருக்கும.
 
புதிதாக அடர்ந்த நிறங்களில் உடைகள் வாங்கும் பொழுது பெரும்பாலும் அவற்றில் உள்ள சாயம் போவதைப் பார்க்கலாம். சிறிதளவு உப்பை தண்ணீரில் கரைத்து சாயம் போகும் உடைகளை அந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அலசினால் உடையில் சாயம் போவது குறையும்.
 
இரவில் உறங்குவதற்கு முன்பு தண்ணீரை கொதிக்க வைத்து சிங்கில் ஊற்றி விட்டு ஒரு கைப்பிடி உப்பை எடுத்து சிங்கின் ஓட்டையில் போட்டு விட்டால் போதும். காலையில் தண்ணீர் ஊற்றி கழுவினால் சிங்கில் உள்ள அடைப்புகள் எல்லாம் வெளியேறி சிங்க் சுத்தமாகி விடும்.
 
ஆப்பிள், உருளைக் கிழங்கு இவற்றை நறுக்கி வைக்கும் பொழுது அவற்றின் நிறம் மாறி விடும். அவ்வாறு நிறம் மாறாமல் இருக்க நறுக்கிய ஆப்பிள், உருளைக் கிழங்கின் மீது சிறிது உப்பைத் தடவி விட்டால் அவற்றின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
 
சாப்பாட்டு மேஜையில் கறைகள் படிந்து அழுக்காகி விட்டால் எலுமிச்சம் பழச் சாறுடன் உப்பைக் கலந்து வைத்துக் கொண்டு அவற்றினால் டேபிளைத் துடைத்தால் அழுக்குகள் அனைத்தும் நீங்கி மேஜை சுத்தமாகி விடும்.
 
பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களைக் கழுவும் பொழுது எலுமிச்சம் பழச் சாறுடன் உப்பு சேர்த்து தேய்த்துக் கழுவினால் பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
 
வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைக் கலந்து பஞ்சில் நனைத்து கண்களில் ஒற்றி எடுத்தால் கண்களில் உள்ள சோர்வு நீங்கி கண் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.