வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சாதாரண உப்பை விட கடல் உப்பில் இத்தனை நன்மைகளா...?

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கடல் உப்பு பயன்படுத்தப்படலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. 

கடல் உப்பைப் பயன்படுத்துவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தலாம். கடல் உப்பில் சோடியம், குளோரைடு மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் இது சாத்தியமாகும். 
 
கடல் உப்பில் காணப்படும் சோடியம், உயிரணுக்களின் வளர்ச்சிக்கு உதவும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். கடல் உப்பு நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் சுறுசுறுப்பாக செயல்பட வைக்க உதவும். மேலேயும் சாதாரண இதயத் துடிப்பை சரியான அளவில் பராமரிக்க உதவும்.
 
கடல் உப்பில் சாதாரண உப்பை விட சோடியம் குறைவாக இருப்பதால் இவை அனைத்தும் சாத்தியமாகலாம். சோடியம் உணவை ஜீரணிக்க உதவுவதோடு கொழுப்பைக் குறைக்கவும் உதவும்
 
கடல் உப்பின் பயன்பாடு, உடலுக்கு பல நன்மைகளைத் தரும். இவற்றில் ஒன்று இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதாகும். கடல் உப்பைப் பயன்படுத்துவது ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க உதவும். உண்மையில், தண்ணீர் குடித்த பிறகு நாக்கில் ஒரு சிட்டிகை கடல் உப்பை எடுத்துக்கொள்வது ஒரு இன்ஹேலரைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில், இதை உறுதிப்படுத்த எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே, அவ்வாறு செய்வதற்கு முன், ஒரு மருத்துவரை அணுகவும்.
 
கடல் உப்பில் சோடியம், குளோரைடு மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இந்த எலக்ட்ரோலைட்டுகள் அனைத்தும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. நரம்பு மண்டலம் சரியாக செயல்பட்டால், மூளையின் செயல்பாடும் மேம்படும். எனவே, கடல் உப்பு மூளைக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.