பட்ஜெட் 2018-19: பொருளாதார ஆய்வறிக்கை - ஒரு பார்வை!!

Last Updated: செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:17 IST)
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
2018-2019 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 7 சதவிதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயர்ந்திருப்பது பெரிய பிரச்சினை என்றும் இதனை சரிக்கட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :