1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:17 IST)

பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர்கள் பெட்டியுடன் வருவதற்கான காரணம் என்ன??

2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பெட்டியடன் வர காரணம் என்ன என்பதை காண்போம்.
 
நிதி அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பெட்டிகளை எடுத்து வருவது வழக்கமானது. இந்த நடைமுறை 1947 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. இதன் பின்னணியில் ஒரு காரணமும் உள்ளது.  
 
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன் முறையாக 1947 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மத்திய நிதி அமைச்சராக இருந்து ஆர்.கே.ஷண்முகம் செட்டி பட்ஜெட் பெட்டியை பயன்படுத்தினார். 
 
அதன் நினைவாகதான் தற்போது வரை இந்தியாவின் மத்திய மற்றும் மாநில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பட்ஜெட் பெட்டியினை பயன்படுத்தி வருகின்றனர் என தகவல்கள் கூறுகின்றனர்.