1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (20:05 IST)

ஜெயலலிதா ஆடியோ வெளீயீடு ஏன்? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான கமிஷன் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து கொண்டு வருகிறது. இந்த விசாரணை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று திடீரென தற்போது வெளிவந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
இந்த நிலையில் தற்போது பெரும் பரபரப்பாக இருக்கும் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசைதிருப்பவே ஜெயலலிதாவின் ஆடியோ மற்றும் அவர் கைப்பட எழுதிய உணவுப்பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளார். 
 
எனவே ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தை திசைதிருப்ப அரசு முயற்சிகளை மேற்கொள்ளாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவை கூடி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.