1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Venkat prabhu is going to direct simbu?

சிம்புவை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா?

சிம்பு
நடிகர் சிம்பு பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிம்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்து விட்டார்.
 
இதையடுத்து, அவர் ஒரு படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்தார். அந்த படம் எந்த மாநில மொழியிலும் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகும் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே அவர் சரண் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், இவர் மங்காத்தா, மாஸ், பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவும், வெங்கட் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
இது என்னடா தினகரனுக்கு வந்த சோதனை - புதிய கட்சி தொடங்கும் டிடிவி பாஸ்கரன்