திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

தமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில் பட்டதை தைரியமாக சொல்பவர் என்பதும் தெரிந்ததே. காவிரி பிரச்சனையில் அவருடைய வித்தியாசமான கருத்துக்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய கோரிக்கையை ஏற்று கர்நாடக தமிழர்களுக்கு அங்குள்ள கன்னடர்கள் தண்ணீர் கொடுத்ததே அவருக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்டிருக்கும் பதட்டம், துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியான 13 உயிர்கள் குறித்து நடிகர் சிம்பு ஆவேசமாக கருத்துக்களை கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் தான் பிரச்சனை என்றால் ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று அந்த வீடியோவில் அவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். சிம்பு இதுகுறித்து கூறியதாவது:
 
தூத்துக்குடி நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இந்த சம்பவத்திற்கு வெறும் இரங்கல் மட்டும் தெரிவித்து உள்ளார்கள். யாருக்கு வேண்டும் உங்கள் இரங்கல். உங்கள் இரங்கலால் என்ன பயன்? இதனால், பலியானவர்கள் திரும்பி வந்துவிடவா போகிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மனசு வலிக்கிறது. மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோதாதே' என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருவதால் டுவிட்டர் டிரெண்டில் கடந்த பல மணிநேரமாக இந்த வீடியோ உள்ளது.