வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (07:11 IST)

சுயமரியாதை இழந்த அடிவருடி: யாரை தாக்குகிறார் உதயநிதி?

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, திமுக ஒரு கம்பெனி என்றும், வாரிசுகள் மட்டுமே அங்கு தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்றும், ஆனால் அதிமுகவில் உழைப்பால் உயர்ந்தவர்கள் பெரிய பதவியை கூட அடைய முடியும் என்றும் காட்டமாக பேசினார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி தனது டுவிட்டரில், 'வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே! சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை' என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். சுயமரியாதை இழந்த அடிவருடி, முதுகெலும்பில்லாத அடிமை என்று உதயநிதி யாரை குறிப்பிட்டார் என்பதை இதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்