1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Saint Asaram was accused in Sexual harassment case

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி - ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி

சாமியார்
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடியாக தீப்பளித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
 
இதில் சாமியார் ஆசாராம் உள்பட 5 பேர் குற்றவாளியெனவும், தண்டனை விவரங்களை 2 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்போவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற்ம் தெரிவித்துள்ளது.
 
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, சாமியார் அடைக்கப்பட்டிருக்கும் ஜோத்பூர் சிறைக்கே சென்று வழங்கனார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 
இந்த தீர்ப்பையொட்டி உபி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நிர்மலா தேவி விவகாரம் - நீதிமன்றத்தில் கருப்பசாமி சரண்