திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (20:33 IST)

உர்ஜித் படேல் ராஜினாமா எதிரொலி: எதிர்க்கட்சி தலைவர்கள் எடுத்த அதிரடி முடிவு

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றிய உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த நிலையில் இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்களுக்கு அனுப்பிவிட்டார். அவரும் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா நாட்டிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து ஆலோசனை செய்ய குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளதாகவும் சற்றுமுன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்

அதன்படி எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை குடியரசு தலைவரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டெல்லியில் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால் முக்கிய தலைவர்கள் அனைவரும் டெல்லியிலேயே இருப்பதால் அவர்கள் அனைவரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ரிசர்வ் வங்கிக்கென கவர்னர் இருக்கும்போது, சுயச்சார்பு கூடுதல் இயக்குநராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டதில் இருந்தே மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.