1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (15:54 IST)

70 முறை மிஷ்கின் கன்னத்தில் அறைந்ததால் படத்திலிருந்து விலக்கப்பட்ட நதியா

விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து நதியா விலகியுள்ளார். 
 
தியாகராஜன் குமரராஜா இயக்கிய `ஆரண்யகாண்டம்' கல்ட் படைப்பாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து `சூப்பர் டீலக்ஸ்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
 
மிஷ்கின், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 
 
இந்த நிலையில், இப்படத்திலிருந்து நடிகை நதியா விலகியுள்ளார். முதலில் கதையை கேட்காமல் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன நதியா, கதையை தெரிந்து கொண்ட பின்னர். என்னால் இதில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டாராம்.
 
காரணம், படத்தில் மிஷ்கினை நதியா ஓங்கி அறையும் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.
அந்த காட்சி யதார்த்தமாக அமையவேண்டுமென்பதற்காக  தன்னை நிஜமாகவே அறையுங்கள் என கூறினாராம். 
 
இந்த ஒரு கட்சியில் மட்டும் 70 வது முறை நதியா மிஷ்கினை அறைந்துள்ளார். இருந்தும் அந்த காட்சியில் யதார்த்தமாக இல்லை. இதனால் மனம் வெறுத்துப்போன நதியா இதற்குமேல் என்னால் நடிக்கமுடியாது வேறு யாரையாவது வைத்து எடுங்கள் என்று கூறி படத்தில் இருந்து அதிரடியாக விலகிவிட்டாராம்.
 
அதற்கு பிறகு நடிக்க வந்த  ரம்யா கிருஷ்ணன் இரண்டே டேக்கில் இன்று அடியில் காட்சி கட்சிதமாக அமைந்ததாம்.
 
ஆனால் நதியா தரப்பு, இனிமேல் என்னால் அவரிடம் ஆதி வாங்கி நடிக்கமுடியாது என்று மிஷ்கின் கூறியதாகவும், நடிப்பு வராதவர்களை ஏன் நடிக வைக்கிறீர்கள் என நதியா இருக்கும்போதே முணுமுணுத்ததால் கோபித்து கொண்டு தான் விலகியதாக நதியா தெரிவித்துள்ளார்.