Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச்.ராஜாவிற்கு எதிர்ப்பு - சென்னை, மதுரையில் வலுக்கிறது போராட்டம்

Updated: புதன், 7 மார்ச் 2018 (12:17 IST)
பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்.  
 
அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், மதுரையில் பாஜக அலுவலகத்தை சிலர் முற்றுகையிட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை கைது செய்தனர். அதேபோல், சென்னை அண்ணாசாலையில் சுப. வீரபாண்டியன் தலைமையில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனக்கூறி அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். மேலும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால், சென்னை அண்ணாசாலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

அடுத்த கட்டுரையில்
Show comments