1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (11:02 IST)

பப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்- 18பேர் பலி

பப்புவா நியூ கினியாவில் நேற்று  6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 18- பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
பப்புவா நியூ கினியாவில் நேற்று நள்ளிரவு 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் 18-பேர் பலியாகியிருக்கலாம் என  அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், மக்கள் சிலர் வீடுகளை இழந்ததால் தெருக்களில் வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  மேலும், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. 
 
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.