திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (09:35 IST)

ஸ்டெர்லைட் அமிலக் கசிவை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டிருக்கும் அமிலக் கசிவை சீர் செய்ய அதிகாரிகள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தூத்துக்குடி கலெக்டர், சந்தீப் நந்தூரி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மக்கள் பயப்படத் தேவையில்லை. இதை அப்புறப்படுத்தப்படும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
அதன் அடிப்படையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உட்பட சிலர் கந்தக அமிலக் கிடங்கில் ஏற்பட்ட கசிவை சீர் செய்தனர். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். 
 
இதனால் ஸ்டெர்லைட் அமிலக் கசிவை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இரண்டாவது நாளாக கசிவை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கசிவை சரி செய்ய ஸ்டெர்லைட் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.