வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (11:32 IST)

முன்அனுமதி இல்லாமல் என் பாடலை பாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை : இளையராஜா

தன்னுடைய பாடல்களை முன் அனுமதி இல்லாமல் பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது பாடல்களை பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்து விட்டு அதன் பின் பாடுவதுதான் முறையாகும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் அனுமதி பெறாமல் பாடுகிறவர்கள், இசைக்குழுவில் வாசிக்கிறவர்கள் அப்படி செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். அனுமதியின்றி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இதுவரை நான் ஐபிஆர்எஸ் நான் நம்பராக இருந்தேன். இப்பொழுது இல்லாததால் இதுவரை என் சார்பாக வசூலித்து வந்த ராயல்டி தொகையை தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை நான் வழங்கி இருக்கிறேன். இனி இசைக் கலைஞர்கள் சங்கம் இந்த ராயல்டி தொகையை வசூல் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பாடகர்கள், பாடகிகள் இதில் அடங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் எல்லோரும் இந்த விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையை தவிர, நீங்கள் பாடிய பாடலுக்கு ராயல்டி தொகை அல்ல நீங்கள் பாடுவது இலவசமாக பாடினால் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
இது ஒரு சிறிய விஷயம். பணம் வாங்குகிறார்கள் அல்லவா. சும்மாவா கச்சேரி செய்கிறீர்கள். என் பாட்டுக்கு நீங்கள் பணம் வாங்குகிறீர்கள். அந்த பணத்தில் எனக்கு பங்கு இல்லையா. பாட்டு என்னுடையது. எப்படி பங்கு இல்லாமல் போகும். பங்கு என்ன ஒரு சின்ன தொகை. அது ஒரு பேருக்குத்தான் நாங்கள் கேட்கிறோம் சட்டப்படியே இருக்கிறோம் என்பதற்காகத்தான்.
 
நாளை வரும் தலைமுறைக்கு இது கண்டிப்பா ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும் அடுத்த தலைமுறைக்கு இது ஒரு முன்னோட்டமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த விடியோவில்  இளையராஜா கூறிவுள்ளார்.