'அது நாங்க இல்லபாஸ்' வதந்திக்கு தமிழ் ராக்கர்ஸ் முற்றுப்புள்ளி

VM| Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (14:34 IST)
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்தப் படத்தை உடனே இணையத்தில் ரிலீஸ் செய்துவருகிறது தமிழ்ராக்கர்ஸ். இது தொடர்பாக அடிக்கடி படத்தை வெளியிட போவதாக ட்விட்டரில் தமிழ் ராக்கர்ஸ் பெயரில் மிரட்டல் வரும். 
சமீபத்தில் விஜய்யின் `சர்கார்' திரைப்படமும் வெளியாகும் அன்றே HD தரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டரில்  பதிவிட்டார்கள். மேலும் 2.0 படத்தையும் வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  'எங்களுக்கு ட்விட்டர்ல அக்கவுண்டே கிடையாதே பாஸ்!' என்று தங்கள் தளத்தில் அறிவித்துள்ளது தமிழ்ராக்கர்ஸ்.


இதில் மேலும் படிக்கவும் :