ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (10:47 IST)

ரஜினியை வைத்து படம் எடுக்க அது இருக்கு ஆனா இல்லை; என்ன சொல்றாரு கார்த்திக் சுப்புராஜ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுப்பது குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ரஜினி சாரை வைத்து படம் துவங்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. அவரை வைத்து படம் எடுக்க நான் பயப்படவில்லை. ஆனாலும் லைட்டா பயம் இருக்கு. எது எப்படி இருந்தாலும், ரசிகர்களுக்கு சிறப்பான படத்தை கொடுப்பேன் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.