செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (11:16 IST)

ரஜினிக்கு ஜோடியாகக் போகும் த்ரிஷா?

ரஜினியை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். 
 
‘மெளனம் பேசியதே’ மூலம் 2002ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா, 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில், நடிகை த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இந்த செய்தி படக்குழுவினரால் உறுதி செய்யப்படவில்லை.