'காலா' சென்சாரில் புது சிக்கல்
கோலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் இருப்பதால் கடந்த ஒரு மாதமாக எந்த புதிய படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் காலா' உள்பட எந்த படத்தின் சென்சாருக்கும் தயாரிப்பாளர் சங்கம் அனுமதி தரவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் ரஜினி-விஷால் சந்திப்பை அடுத்து 'காலா' படம் ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால் அந்த படத்திற்கு சென்சார் செய்ய அனுமதித்து தயாரிப்பாளர் சங்கம் கடிதம் கொடுத்தது. இதனையடுத்து காலா சென்சார் சிக்கல் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகள் 'காலா' படத்தை பார்த்துவிட்டதாகவும், படத்தில் எந்தவித கட்டும் இல்லாமல் வேண்டுமானால் 'யூ' சான்றிதமிழும் 10 கட்டுக்கு சம்மதித்தால் 'ஏ' சான்றிதழும், 14 கட்டுக்கு சம்மதித்தால் 'யூஏ' சான்றிதழும் அளிக்கவுள்ளதாக சென்சார் போர்டு கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் இயக்குனர் ரஞ்சித், சென்சார் அதிகாரிகளிடம் கட் இல்லாமல் 'யூ' சான்றிதழ் பெற முயற்சித்து வருவதாகவும், இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது