திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (12:03 IST)

‘இன்று நேற்று நாளை’ படம் தெலுங்கில் ரீமேக்!

‘இன்று நேற்று நாளை’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப்  படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார்  உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
 
 டைம் மிஷின் மூலம் கடந்த காலம் மற்றும் எதிர்காலங்களுக்குச் சென்று என்ன நடக்கிறது என்பது போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு  இருந்தது. ரசிகரிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 2015ம் ஆண்டின் பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடித்தது. 
 
இந்நிலையில், இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய ஆர். ரவிக்குமார் சிவகார்த்திகேயன் படத்தை  இயக்கி வருகிறார். இதனால் ரவிக்குமாருக்கு பதில் மோகன் கோவிந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழில் ‘இன்று நேற்று நாளை’ படத்தை தயாரித்த சி.வி.குமாரே திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தெலுங்கிலும் தயாரிக்கிறார்.
 
விஷ்ணு விஷால் நடித்த ஹீரோ வேடத்தில், சந்தீப் கிஷன் நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் இவர்.  விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.