அபிநந்தனை விடுவிக்க மத்திய அரசின் ராஜதந்திரம் இதுதான்;
நேற்று பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர் அபிநந்தன் சிக்கி கொண்டதும், அவரை வைத்து பாகிஸ்தான், இந்தியாவிடம் சில விஷயங்களை சாதித்து கொள்ள திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. ஆனால் இந்தியாவிடம் இருந்து பேச்சுவார்த்தை இல்லை என்ற பதில் அழுத்தந்திருத்தமாக வந்தது. மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா நேரடியாக வேண்டுகோள் விடுக்காமல் உலக நாடுகளிடம் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது
குறிப்பாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அரபு நாட்டு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன், அரபுநாடுகள் உள்பட ஒரே நேரத்தில் 20 நாட்டு தலைவர்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தான், அபிநந்தனை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியாவின் இந்த ராஜதந்திரம் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது