திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 25 ஜூலை 2018 (21:38 IST)

நீ விருப்பப்பட்டுத்தானே போன! ஸ்ரீரெட்டியை வெளுத்து கட்டிய சோனியா

கோலிவுட் திரையுலகில் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்தவர் சோனியா போஸ். இவர் சமீபத்தில் கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை ஸ்ரீரெட்டியை பேட்டி ஒன்றின் மூலம் வெளுத்து கட்டியுள்ளார்.
 
ஒரு பெண் ஒருவரிடத்தில் ஏமாறலாம், இருவரிடத்தில் ஏமாறலாம். இத்தனை பேர்களிடம் யாராவது ஏமாறுவார்களா? சான்ஸ் வேண்டும் என்று நீயே விருப்பப்பட்டு தானே போய் இருக்கின்றாய்? ஒரு பெண் விருப்பப்பட்டு இன்னொருவருடன் உறவு கொண்டாலே அதில் குற்றம் எதுவும் இல்லை. சட்டப்பட்டி யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் தகாத முறையில் நடந்தால்தான் அது குற்றம்
 
ஒரு பெண்ணாக மட்டுமின்றி பெண் இனத்தையே கேவலப்படுத்தும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபட்டு வருவதாகவும், போராட்டம் நடத்துவதற்கு எத்தனையோ வழி இருக்கும்போது அரை நிர்வாண போராட்டம் நடத்தியதில் இருந்தே அவர் தெளிவாக திட்டமிட்டு விளம்பரத்திற்காக இதனை செய்து வருவது உறுதியாகியுள்ளதாகவும் சோனியா போஸ் கூறியுள்ளார்.
 
மேலும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் முருகதாஸ், ஸ்ரீரெட்டிக்கு சான்ஸ் தருகிறேன் என்று கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் திரையுலகமே மரியாதை வைத்திருக்கும் அவர் மீது ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை நம்பவே முடியாது என்றும் கூறியுள்ளார்.