திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (15:44 IST)

அஸ்வினிக்காக ஆவேசமடைந்த காயத்ரி ரகுராம்!

சென்னையில் அஸ்வினி என்ற கல்லூரி பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை டுவிட்டரில் ஆவேசமாக திட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
 
சென்னையில் நேற்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி அஸ்வினி. அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக காய்த்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், மூளையும் இதயமும் இல்லாத காட்டுமிராண்டி காதல் என்ற பெயரில் இளம் பெண் அஸ்வினியை கொலை செய்துள்ளான். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 
இந்த பதிவில் அவர் ’அஸ்வினி’ என்று பெயர் குறிப்பிடுவதற்கு பதிலாக ’அஸ்வின்’ என்று குறிப்பிட்டுள்ளார்.