செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (22:36 IST)

மோடியின் ஹெலிகாப்டரை ஆய்வு செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இந்தியா முழுவதும் சோதனை செய்து கோடிக்கணக்கான ரொக்கத்தையும், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளியையும் கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
பறக்கும் படையினர் சோதனையில் மத்திய அமைச்சர்க்ளும், முன்னாள் முதல்வர்களும், மாநில அமைச்சர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கூட தப்பவில்லை
 
இந்த நிலையில் ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் தேர்தல் பிரசாரத்திற்காக  பிரதமர் நரேந்திர மோடி் ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமரின் ஹெலிகாப்டரையே ஆய்வு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆய்வு செய்த அதிகாரிகளை   இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது