திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (22:07 IST)

அவசர அவசரமாக சென்னை திரும்பும் திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து சென்னையில் உள்ள கருணாநிதியின் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி மருத்துவமனை நோக்கி குவிந்தவண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள திமுக எம்பிக்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திமுக எம்.எல்.ஏக்களும் சென்னை திரும்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் ஏற்கனவே காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.
 
இந்த நிலையில் தமிழக காவல்துறையினருக்கு உயரதிகாரிகளிடம் இருந்து 'அலெர்ட்' மெசேஜ் சென்றுள்ளதாகவும் இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.