1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 19 ஜூலை 2018 (22:18 IST)

அஜித்துக்கு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்துள்ளேன்: 'கடைக்குட்டி சிங்கம்' பாண்டிராஜ்

கார்த்தி, சாயிஷா நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகி வசூலை குவித்து வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், அஜித்தை தான் சந்தித்த நிகழ்ச்சி ஒன்று குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
கே.பாக்யராஜ் நடத்திய 'பாக்யா' இதழின் அலுவலகத்தில் தான் ஆபீஸ் பாய் ஆக வேலை செய்து வந்ததாகவும், அந்த அலுவலகத்திற்கு அஜித் தன் நண்பர்களுடன் அடிக்கடி வருவார் என்றும், நண்பர்களுடன் மொட்டை மாடியில் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார் என்றும், அப்போது நான் அஜித்துக்கு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்துள்ளேன்' என்றும் கூறியுள்ளார்.
 
இதெல்லாம் அஜித்துக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பே இல்லை. இருப்பினும் தற்போது நான் அஜித்தை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன். உங்களுக்கு அந்த ஆசை இருக்கா? இருந்தால் கூப்பிடுங்கள்' என்றும் அந்த பேட்டியின் மூலம் அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு அஜித் என்ன பதில் கூற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்