வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (15:31 IST)

புதிய கார் வாங்கிய தல அஜித்; வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில், தனது நேரத்தை வேறு காரியங்களில் செலவிடும்  'தல' அஜித், கார், பைக் ரேஸில் பல போட்டிகளில் கலந்து கொண்டவர். 
பார்முலா கார் ரேஸில் கலந்து கொண்ட வெகு சிலரில் நடிகர் அஜித்தும் ஒருவர். மேலும் 2003ல் நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் என்ற  சர்வதேச போட்டியிலும், 2010ல் நடந்த சர்வதேச பார்முலா 2 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். தல அஜித் என்னதான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், ப்ரோபெஷ்னல் ரேசராக இருந்தாலும் எப்போதும் சிம்பிளாக ஒரு ஸ்விப்ட் காரில் தான் வருவார். அதை தான் அதிகம் பயன்படுத்துவார்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய வோல்வோ காரை அவர் வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படம் மற்றும் காணொளி தற்போது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது.