ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (14:27 IST)

விஸ்வாசத்தில் என்னை அறிந்தால் பட டச்!

நான்கவது முறையாக் அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விஸ்வாசம் படம் உருவாகி வருகிறது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 
 
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஸ்வாசம் என்ன மாதிரியான கதை என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் குறித்த புதுப்புது தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 
 
அந்த வகையில் இந்த படத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா இந்த படத்திலும் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியது. தற்போது இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜித் அதில் ஒரு வேடத்தில் போலீஸாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
எனவே, சிவாவின் விஸ்வாசம் படத்தில் கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் டச் இருக்கும் போல என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.