சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 16.38 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நடைபெற்றபோது பாடத்தின் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனதால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை செயலாளர் அறிவித்திருந்தார். ஆனால், தேர்வு முடிவுகள் இன்று 3 மணி நேரம் முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
results.gov.in, Cbse.nic.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.