செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (20:38 IST)

ஆடி கார் நிர்வாகி அதிரடி கைது!

ஆடம்பர வாகனமான ஆடி கார் நிறுவனத்தின் நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட வழக்கில் இவர் சாட்சியங்களை மறைக்க கூடும் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டீசல் புகை வெளியேற்ற விவரங்களை மறைப்பதற்காக தங்கள் கார்களில் கருவிகளை பொருத்தியதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
முதன் முதலில் இந்த ஏமாற்றுக்கருவிகள் வோல்க்ஸ் வேகன் கார்களில் பொறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆடி காரிலும் இந்த டீசல் புகை வெளியேற்ற தரவு மறைப்பு கருவி பொருத்தப்பட்டது பிற்பாடு சோதனைகளில் தெரியவந்தது.
 
இதனையடுத்து பொய் விளம்பரம், மோசடி என்று ஆடி கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் சாட்சிகளை அமுக்கி விடுவார் என்ற காரணமாக ருபர்ட் ஸ்டாட்லரை கைது செய்ய நீதிபதி உத்தவிட்டதாக ஜெர்மனி சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.