திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (07:53 IST)

முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்: மம்தாவுக்கு அமித்ஷா சவால்

மேற்குவங்க மாநிலத்தலைநகர் கொல்கத்தாவில் பாஜகவின் பிரமாண்டமான பேரணி ஒன்றை வரும் 11ஆம் தேதி நடத்த பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பேரணிக்கு மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தடையை மீறி, கொல்கத்தா சென்ற்து பேரணியை நடத்தவுள்ளதாகவும் முடிந்தால் தன்னை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கைது செய்து பார்க்கட்டும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நேற்று அமித்ஷா அளித்த பேட்டியின்போது கூறியதாவது: கொல்கத்தாவில் பாஜக பேரணியை திட்டமிட்டபடி, நடத்தியே தீருவோம். பேரணி நடத்தினால் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, என்னை கைது செய்வதாக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் நான் மம்தாவுக்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால், என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று கூறினார். 
 
அமித்ஷாவின் இந்த சவாலுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, '''மேற்கு வங்கத்தில் எங்கு வேண்டுமானாலும், அமித் ஷா செல்லட்டும். அவரை யாரும் தடுக்கப் போவதில்லை,'' என்று கூறினார். அதே நேரத்தில் அமித்ஷா கைது செய்யப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.