1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (20:13 IST)

ஒரே நாளில் அத்வானி, சோனியாவை சந்தித்த மம்தா: திட்டம்தான் என்ன?

ஒரே நாளில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் டெல்லியில் பாராளுமன்றம் வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான ஜெயாபச்சன், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா ஆகியோர்களையும் இன்று மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார்.
 
ஒரே நாளில் அகில இந்திய அளவில் உள்ள முக்கிய தலைவர்களை மம்தா பானர்ஜி ஏன் சந்தித்தார்? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் பிரமாண்டமான பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவே அவர் அகில இந்திய தலைவர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பேரணிக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே அழைப்பு விடுக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த சந்திப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.