திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (20:37 IST)

நடிகர்களின் கட்சியில் 'மக்கள்: மக்களின் மனதில் யார்?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடிகர்கள் பலருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது. வெற்றிடத்தை நிரப்ப போவதாக ஆளாளுக்கு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

இதில் முந்தியவர் கமல்ஹாசன் தான். இவர் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

அடுத்தாற்போல் ரஜினிகாந்த் தற்போது 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். இதே பெயரிலோ அலலது வேறு பெயரிலோ இந்த அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறவுள்ளது.

இந்த நிலையில் இன்று விஷால் தனது ரசிகர் மன்றத்தை 'மக்கள் நல இயக்கம்' என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம்' என்ற ரசிகர் மன்றம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர்களின் அரசியல் கட்சிகளின் பெயர்களில் 'மக்கள்' என்ற வார்த்தை தவறாமல் இடம்பெற்றுள்ளது. ஆனால் மக்களின் மனதில் இந்த அரசியல் கட்சி இடம்பெற்றுள்ளதா? என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும்