ரஜினி தான் தள்ளி போடச் சொன்னார்: ஷங்கர்

sankar
VM| Last Updated: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (15:01 IST)
கேரளா வெள்ளம் காரணமாகவே 2.0 படத்தின் டீசரை  ரஜினிகாந்த் தள்ளிப்போடச் சொன்னார் என இயக்குனர் ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தின் 2ம் பாகமாக 2.0 படம் தயாராகி வருகிறது. அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.  இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாக நடந்து வருவதால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இப்படத்தின் 
டீசரை  ரஜினிகாந்த் தள்ளிப்போடச் சொன்னார் என இயக்குனர் ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :